ஜம்மு காஷ்மீர் செல்ல வேண்டாம்: தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுரை


ஜம்மு காஷ்மீர் செல்ல வேண்டாம்: தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுரை
x
தினத்தந்தி 17 Nov 2021 10:16 AM GMT (Updated: 17 Nov 2021 10:31 AM GMT)

பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மை போன்ற காரணங்களால் குடிமக்கள் ஜம்மு காஷ்மீர் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டு மக்கள் ஜம்மு காஷ்மீர் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு  அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை தங்கள் நாட்டு குடிமக்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளாதவது;- 

 பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மை போன்ற காரணிகளால் குடிமக்கள் ஜம்மு காஷ்மீர் செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல், ஆயுதம் தாங்கிய மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய 10 கி.மீட்டர் தொலைவுக்கு பயணிக்கக் கூடாது. 

பிற மாநிலங்களுக்கு செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும். பாலியல்  பலாத்காரங்கள் உள்ளிட்ட மோசமான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக சுற்றுலாத்தளங்கள் போன்ற இடங்களில்  இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

பாகிஸ்தானில் பயங்கராவாத தாக்குதல்களும் இன மோதல்களும் அதிகரித்து இருப்பதால் அங்கு செல்லும் திட்டம் இருந்தால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story