தேசிய செய்திகள்

குஜராத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா + "||" + Corona for 54 people in Gujarat today

குஜராத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா

குஜராத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா
குஜராத் மாநிலத்தில் தற்போது 291 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காந்திநகர்,

குஜராத் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,27,068 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. குஜராத் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,090 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 16 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதன் மூலம் குஜராத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,16,687 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 291 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக குஜராத் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இயக்குநர் செல்வராகவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
இயக்குநர் செல்வராகவனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34.98 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27.81 கோடியை தாண்டியது.
3. ஒமைக்ரானின் புதிய வடிவத்தை அறிவித்தது இங்கிலாந்து; 400- க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இங்கிலாந்து நாட்டில் ஒமைக்ரானின் புதிய வடிவம் அறிவிக்கப்பட்டிருப்பது, கொரோனா எப்போது ஒழியப்போகிறது என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.
4. சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் அதிவேகமாக உயரும் கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்து 744 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.