லகிம்பூர் வன்முறை: விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


லகிம்பூர் வன்முறை: விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Nov 2021 7:22 PM GMT (Updated: 17 Nov 2021 7:22 PM GMT)

லகிம்பூர் வன்முறை தொடர்பாக விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் லகிம்பூரில் நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘லகிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்குகளின் சிறப்பு விசாரணைக்குழுவின் (எஸ்.ஐ.டி.) விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் கண்காணிப்பார். 

இந்த வழக்கை பாரபட்ச முறையிலும் சுதந்திரமாகவும் விசாரிப்பதை நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் தலைமையிலான ஆணையம் உறுதி செய்யும். சிறப்பு விசாரணை குழுவில் ஐ.பி.எஸ். அதிகாரிகளான சிரோத்கர், தீபிந்தர் சிங், ஐஜி பத்மஜா சவுகான் ஆகியோரும் இடம் பெறுவார்கள். இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் நடைபெறும்’ என உத்தரவிட்டனர்.

Next Story