தேசிய செய்திகள்

கர்நாடகா: மழைவெள்ளத்தில் சிக்கி 24 ஆடுகள் உயிரிழப்பு + "||" + Karnataka: 24 goats death in floods

கர்நாடகா: மழைவெள்ளத்தில் சிக்கி 24 ஆடுகள் உயிரிழப்பு

கர்நாடகா: மழைவெள்ளத்தில் சிக்கி 24 ஆடுகள் உயிரிழப்பு
கர்நாடகாவில் மழைவெள்ளத்தில் சிக்கி 24 ஆடுகள் உயிரிழந்தது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சித்ரதுர்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

இதனால் ஓடைகள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தரைமட்ட பாலங்களை மூழ்கடித்தப்படி வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது. இதில் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஒசதுர்கா தாலுகா தெக்கலவாடி கிராமத்தில் 14 ஆடுகள் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தன. அதுபோல் சிக்கமகளூரு மாவட்டம் விவிதாடஹள்ளி கிராமத்திலும் வெள்ளத்தில் சிக்கி12 ஆடுகள் பலியானது. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 4 ஆடுகளை விவசாயிகள் காப்பாற்றினர். வெள்ளத்தில் சிக்கி பலியான ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் ஒரே நாளில் 52 பேர் உயிரிழப்பு
கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
2. விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாலிபரை அடித்துக்கொன்ற திருநங்கைகள்...!
திருநங்கைகள் வைத்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
3. கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்படாது- மந்திரி சுதாகர் உறுதி
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருந்த வார இறுதி நாட்கள் ஊரடங்கை அரசு ரத்து செய்திருந்தது.
4. கர்நாடகாவில் இன்று 46,426 பேருக்கு கொரோனா தொற்று....!
கர்நாடகாவில் இன்று மேலும் 46,426 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகத்தில் 100 சதவீத முதல் டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை- மந்திரி சுதாகர் பேட்டி
மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.