பஞ்சாப் சட்டசபை தேர்தல்; ஆம் ஆத்மி கட்சிக்கு தி கிரேட் காளி ஆதரவு


பஞ்சாப் சட்டசபை தேர்தல்; ஆம் ஆத்மி கட்சிக்கு தி கிரேட் காளி ஆதரவு
x
தினத்தந்தி 18 Nov 2021 3:41 PM GMT (Updated: 18 Nov 2021 3:41 PM GMT)

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மல்யுத்த வீரர் தி கிரேட் காளி தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.



புதுடெல்லி,

பஞ்சாப் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், மல்யுத்த வீரர் தி கிரேட் காளி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை இன்று நேரில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு தனது ஆதரவை அவர் வழங்கியுள்ளா.

கெஜ்ரிவால் தலைமையிலான அரசு கல்வி, சுகாதாரம், குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் ஆற்றியுள்ள பணிகளுக்கு காளி பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.  சமூக நலனுக்காக, சாத்தியப்பட்ட அனைத்து வழிகளிலும் கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story