தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் நேற்று 369 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் + "||" + In Karnataka 369 people recovered from corona yesterday

கர்நாடகத்தில் நேற்று 369 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

கர்நாடகத்தில் நேற்று 369 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடக மாநிலத்தில் நேற்று 313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அங்கு நேற்று செய்யப்பட்ட 86 ஆயிரத்து 690 பரிசோதனைகளில் 313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 92 ஆயிரத்து 897 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்தனர். 

இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 165 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரு நகரில் 179 பேர், தட்சிண கன்னடாவில் 9 பேர், மைசூருவில் 51 பேர், ஹாசனிலடி் 13 பேர், துமகூருவில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூருவில் 2 பேரும், ராமநகர், உத்தரகன்னடாவில் தலா ஒருவரும் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அதே சமயம் கர்நாடகத்தில் ஒரே நாளில் 369 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 47 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு கொரோனா தொற்று
கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. 53 பேர் உயிரிழப்பு; தமிழகத்தில் 28 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 28 ஆயிரத்து 515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஜெர்மனியில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா
ஜெர்மனியில் ஒரே நாளில் 2,03,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
5. கர்நாடகத்தில் நன்னடத்தை அடிப்படையில் 166 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - மந்திரிசபை முடிவு
கர்நாடக சிறைகளில் உள்ள 166 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய மந்திரிசபை முடிவு செய்துள்ளது.