தேசிய செய்திகள்

விவசாய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் - ராகேஷ் டிகாயிட் + "||" + The struggle will continue till the agrarian laws are repealed - Rakesh Dekoit

விவசாய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் - ராகேஷ் டிகாயிட்

விவசாய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் - ராகேஷ் டிகாயிட்
நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக காத்திருப்போம் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் டுவீட் செய்துள்ளார்
புதுடெல்லி

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

`விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருட்களை சுலபமாக விற்பனை செய்வதற்கு பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 3 வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

3 வேளாண் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மிக விரிவான விவாதம் நடத்தப்பட்டு உள்ளது. மூன்று வேளாண் சட்டங்களின் நலன்களை விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை.

 மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்து இருக்கிறோம். ஒரு வருடத்துக்கு மேலாக போராடி வரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

டெல்லி எல்லையில் போராடிவரும் விவசாயிகளுக்கு வெற்றி என பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம் எனவும் கூறியுள்ளனர்.

போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட மாட்டாது.  நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக காத்திருப்போம் என்றும் விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் டுவீட் செய்துள்ளார்.
விவசாயிகளின் பிற பிரச்சினைகளையும் அரசு விவாதிக்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
2. பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்களால் அதிகரித்த கொரோனா..!! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இமாசலபிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கொரோனா அதிகரித்ததற்கு பிரதமர் மோடி நடத்திய பொதுக்கூட்டங்களே காரணம் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் குற்றம் சாட்டின.
3. வெறுப்புணர்வை தூண்டுபவர்களுக்கு உங்களது அமைதி தைரியம் அளிக்கிறது: பிரதமருக்கு ஐஐஎம் மாணவர்கள் கடிதம்
சமீபத்தில் ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முஸ்லீம்களுக்கு எதிராக இந்து மத தலைவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
4. மணிப்பூர்: ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்!
பிரதமர் மோடி இன்று வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் திரிபுராவுக்கு சென்றார்.
5. பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள வேண்டும்: ஓவைசி
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் 177 கோடி ரூபாய்கும் மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.