தேசிய செய்திகள்

நாட்டு மக்களின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை- அமித்ஷா புகழாரம் + "||" + PM's "Statesmanship" To Pick Guru Purab For Farm Laws Rollback: Amit Shah

நாட்டு மக்களின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை- அமித்ஷா புகழாரம்

நாட்டு மக்களின் நலனைத்  தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை- அமித்ஷா புகழாரம்
பிரதமர் இந்த அறிவிப்பை ‘குரு புராப்’ தினத்தில் வழங்கியிருப்பதை கூடுதல் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது என அமித்ஷா பாராட்டியுள்ளார்.
புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக  பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.  பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்றும், தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாக விமர்சித்தும் எதிர்க்கட்சிகள் கருத்து கூறி வருகின்றன. 

இந்த நிலையில்,  பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-

பிரதமர் இந்த அறிவிப்பை ‘குரு புராப்’ தினத்தில் வழங்கியிருப்பதை கூடுதல் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது. பிரதமரின் இந்த அறிவிப்பு, ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த அறிவிப்பு மூலம் தனது மிகச்சிறந்த அரசியற்திறனை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - பிரதமர் மோடி அறிவிப்பு
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.
2. நாட்டு மக்களுக்கு இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி உரை...!
பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
3. அனைத்து சவால்களையும் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி
அனைத்து சவால்களையும் ஜனநாயக முறையில் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
4. மோடி, அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு ஆள் திரட்ட அரசுப்பணத்தை செலவழிப்பதா? - பிரியங்கா காந்தி கண்டனம்
மோடி, அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு ஆள் திரட்ட அரசுப்பணத்தை செலவழிப்பதா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
5. பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பலனளிக்கும் என பிரதமர் மோடி பேசினார்.