திரிபுராவில் பா.ஜனதா-திரிணாமுல் காங்கிரசார் மோதல் - 19 பேர் காயம்


திரிபுராவில் பா.ஜனதா-திரிணாமுல் காங்கிரசார் மோதல் - 19 பேர் காயம்
x
தினத்தந்தி 19 Nov 2021 7:19 PM GMT (Updated: 2021-11-20T00:49:25+05:30)

திரிபுராவில் பா.ஜனதா-திரிணாமுல் காங்கிரசார் இடையே நடந்த மோதலில் 19 பேர் காயம் அடைந்தனர்.

அகர்தலா,

திரிபுரா மாநிலம் ஹோவை மாவட்டத்தின் தெலியமுரா பகுதியில் பா.ஜனதா கட்சியினர் மற்றும் திரிணாமுல் காங்கிரசார் இடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் காயம் அடைந்தனர். இதில் 2 போலீசாரும் அடங்குவர்.

புதன்கிழமை காலையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே அந்த பகுதி பா.ஜ.க. அலுவலகத்தை நெருங்கினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story