தேசிய செய்திகள்

சந்திரபாபு நாயுடு அழுகை...! விரக்தியில் உள்ளார் - ஜெகன் மோகன் ரெட்டி சொல்கிறார் + "||" + Chandrababu Naidu cries ...! Jagan Mohan Reddy says he is in despair

சந்திரபாபு நாயுடு அழுகை...! விரக்தியில் உள்ளார் - ஜெகன் மோகன் ரெட்டி சொல்கிறார்

சந்திரபாபு நாயுடு அழுகை...! விரக்தியில் உள்ளார் - ஜெகன் மோகன் ரெட்டி சொல்கிறார்
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதி

ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுகுறித்து  ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:-
          
 “சந்திரபாபுவை மக்கள் நிராகரித்து விட்டனர். அவரது சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அவரது கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. சட்ட மேலவையிலும் அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. தான் என்ன செய்கிறோம்; எப்படி நடக்கிறோம் என்பதை சந்திரபாபுவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சட்டசபையில் அவர், தேவையில்லாத மற்றும் சம்பந்தமில்லாத விஷயங்கள் குறித்து பேசினார். அவருக்கு பதிலடி கொடுக்கப்பட்டதும், அழுகிறார். அனைத்து விஷயத்தையும் அவர் தான் ஆரம்பித்து வைத்தார். சந்திரபாபு விரக்தியில் உள்ளதை மாநில மக்கள் அறிவார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக குற்றச்சாட்டு; தெலுங்கு தேசம் எம்.பிக்கு 6 மாதம் சிறை தண்டனை
வாக்காளர்களுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டில் தெலுங்கு தேசம் எம்.பிக்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.