காஷ்மீர்: நாளுக்குநாள் குறையும் வெப்பநிலை; வீட்டிற்குள் முடங்கிய மக்கள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Nov 2021 9:29 AM GMT (Updated: 20 Nov 2021 9:29 AM GMT)

காஷ்மீரில் வெப்பநிலையானது நாளுக்குநாள் குறைந்துகொண்டே செல்கிறது. வீட்டிற்குள் மக்கள் முடங்கி உள்ளனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் வெப்பநிலையானது  நாளுக்குநாள் குறைந்துகொண்டே செல்வதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்படுகிறது. ஸ்ரீநகரில் நேற்று இரவு மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக மைனஸ் 1.5 டிகிரி செல்சியஸில் பதிவாகியுள்ளது. பள்ளத்தாக்கு முழுவதும் குறைந்தபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. அங்கு வெப்பநிலை முன்பை விட இரண்டு டிகிரி குறைந்துள்ளது என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருடாந்திர அமர்நாத் யாத்திரைக்கான அடிப்படை முகாமாக செயல்படும் பஹல்காமில் மைனஸ் 4.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  காஷ்மீரில் மிகவும் குறைவான வெப்பநிலை பஹல்காமில் பதிவாகியுள்ளது.

பள்ளத்தாக்கின் நுழைவாயில் நகரமான காசிகுண்டில் மைனஸ் 1.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் தெற்கு காஷ்மீரில் உள்ள கோகர்நாக், மைனஸ் 1.3 டிகிரி செல்சியஸ் ஆகக் குறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் அதிகாலையில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.


Next Story