தேசிய செய்திகள்

டெல்லி போராட்டம்; விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சந்திரசேகர ராவ் கோரிக்கை + "||" + Delhi struggle; Chandrasekara Rao demands Rs 25 lakh compensation for farmers

டெல்லி போராட்டம்; விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சந்திரசேகர ராவ் கோரிக்கை

டெல்லி போராட்டம்; விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சந்திரசேகர ராவ் கோரிக்கை
வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெலுங்கானா முதல்-மந்திரி கோரிக்கை விடுத்து உள்ளார்.

ஐதராபாத்,


நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களில் பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி டெல்லியில் விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.  இந்த போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவுகளும் வெளிவந்தன.

இந்த நிலையில், தெலுங்கானா முதல்-மந்திரி இன்று கூறும்போது, வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு எங்களுடைய அரசு சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.  மத்திய அரசு ரூ.25 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.  உயிரிழந்த ஒவ்வொரு விவசாயியின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மதுக்கடைகளை முழுவதுமாக மூடவேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை
மதுக்கடைகளை முழுவதுமாக மூடவேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை.
2. மத்திய அரசு நிதியுதவியுடன் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மத்திய அரசு நிதியுதவியுடன் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.
3. காவிரி பாசன மாவட்டங்களில் நெற்பயிர் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
காவிரி பாசன மாவட்டங்களில் நெற்பயிர் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
4. ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் அவசியம் என்றும், ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
5. குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும் மு.க.ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை
பாலியல் குற்றங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.