போர்க்கப்பல் தயாரிப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது; மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்


போர்க்கப்பல் தயாரிப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது;  மத்திய  அமைச்சர் ராஜ்நாத்சிங்
x
தினத்தந்தி 21 Nov 2021 8:19 AM GMT (Updated: 21 Nov 2021 8:19 AM GMT)

சில பொறுப்பற்ற நாடுகள், கடல்சார் தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தத்தை மீறுவதாக சீனாவை ராஜ்நாத்சிங் மறைமுகமாக சாடினார்.

மும்பை,

மேக் இன் இந்தியா திட்டத்தில் போர்க்கப்பல், நீர் மூழ்கி கப்பல்கள் தயாரிப்பில்  நம்நாடு முன்னணியில் உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். 

மும்பையில் கட்டப்பட்ட விசாகப்பட்டினம் போர்க்கப்பலை கடற்படையில்  இணைத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில் இவ்வாறு பேசினார். அப்போது அவர் கூறியதாவது; -  இந்தோ பசிபிக் கடல்பாதையில் இந்திய கடற்படையின் பங்கு முக்கியமானது.  விசாகப்பட்டினம் போர்க்கப்பல் நாட்டில் கட்டப்பட்டுள்ள போர்க்கப்பல்களில் மிகவும் பெரியதாகும்.

இந்தியாவை உள்நாட்டு கப்பல் கட்டும் மையமாக உருவாக்க  எல்லா வாய்ப்புகளும் நமக்கு உள்ளன.  குறுகிய நலன்கள் கொண்ட சில பொறுப்பற்ற நாடுகள், கடல்சார் தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தத்தை மீறுகின்றன.  இந்தியா பொறுப்பு வாய்ந்த கடல்சார் பங்குதாரராக விளங்குகிறது” என்றார். 

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விசாகப்பட்டினம் போர்க்கப்பல், ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகளை கொண்டதாகும். அதேபோல், அதி நவீன மின்னணு போர்தளவடாங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் கொண்டது இந்த போர்க்கப்பல் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story