தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசம்: பிணவறையில் வைக்கப்பட்ட உடல் திடீரென அசைந்ததால் பரபரப்பு..! + "||" + In mortuary freezer for 7 hours, ‘dead’ man returns to life in UP's Moradabad

உத்தரப் பிரதேசம்: பிணவறையில் வைக்கப்பட்ட உடல் திடீரென அசைந்ததால் பரபரப்பு..!

உத்தரப் பிரதேசம்: பிணவறையில் வைக்கப்பட்ட உடல் திடீரென அசைந்ததால் பரபரப்பு..!
குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்ட உடல் 7 மணி நேரம் கழித்து திடீரென அசைந்தது.
மொராதாபாத்,

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகேஷ் குமார் (40). எலக்ட்ரீஷியனாக பணிப்புரிந்து வந்த இவர், கடந்த வியாழக்கிழமை எதிரே வேகமாக வந்த மோட்டார் பைக் மோதி படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஸ்ரீகேஷ் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீகேஷின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினர்கள் மருத்துவமனைக்கு வந்து அடையாளம் காட்டும் வரை வரை ஸ்ரீகேஷின் உடல் பிணவறையில் உள்ள குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டது. பின்னர், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சுமார் ஏழு மணி நேரத்திற்கு பிறகு, மருத்துவமனைக்கு வந்த ஸ்ரீகேஷின் குடும்பத்தினர், உடலை அடையாளம் காட்டிய பின் பிரேதப் பரிசோதனைக்கு சம்மதித்து ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.  இந்த ஆவணத்தை போலீசார் சமர்ப்பிக்க முற்பட்டபோது, ஸ்ரீகேஷின் உடலில் அசைவு தெரிவதை அவரது உறவினர் ஒருவர் கவனித்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஸ்ரீகேஷின் உடலை பரிசோதனை செய்தபோது, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஸ்ரீகேஷின் உறவினர்கள் கூறுகையில், "அவர் இன்னும் சுயநினைவுக்கு வரவில்லை. அவரை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து கிட்டத்தட்ட கொன்றுவிட்டனர். அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது புகார் அளிக்கப்படும்" என்று அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மொராதாபாத் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷிவ் சிங் கூறியதாவது, "படுகாயங்களுடன் வந்த ஸ்ரீகேஷை அவசரப் பிரிவு மருத்துவர்கள் அதிகாலை 3 மணியளவில் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு இதயத் துடிப்பு இல்லை. அவரை பலமுறை பரிசோதித்த பிறகே, இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால், காலையில் ஸ்ரீகேஷ் உயிருடன் இருப்பது எங்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது. இது அரிதிலும் அரிதான நிகழ்வு. இதை அலட்சியம் என்று சொல்ல முடியாது. இதுகுறித்து விசாரிக்கிறோம். தற்போது அவரது உயிரைக் காப்பாற்றுவதே எங்களுக்கு முதல் வேலை". இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா மூன்றாவது அலை; மாநில அளவில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களின் புள்ளிவிவரம்...!
கொரோனா மூன்றாவது அலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதற்கு முந்தைய கொரோனா அலைகளை விட குறைவு என்று தெரியவந்துள்ளது.
2. தமிழகத்தில் புதிதாக 26,981 பேருக்கு கொரோனா; 1.70 லட்சம் பேருக்கு சிகிச்சை..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரத்து 981 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
3. விபத்தில் சிக்கிய 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நீங்கள் தான் கடவுள் - லெப்டினன்ட் ஜெனரல் அருண்
குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம் என்று லெப்டினன்ட் ஜெனரல் அருண் தெரிவித்துள்ளார்.
4. சாலை விபத்தில் சிக்கிய ஷேன் வார்னே: மருத்துவமனையில் அனுமதி...!
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே சாலை விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக இன்று புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.