ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதிவியேற்பு


ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதிவியேற்பு
x
தினத்தந்தி 21 Nov 2021 11:19 AM GMT (Updated: 21 Nov 2021 11:31 AM GMT)

ராஜஸ்தானின் புதிய மந்திரி சபை இன்று பதவியேற்றுக்கொண்டது.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மந்திரிசபையில் மாற்றம் செய்வதற்கு கடந்த சில மாதங்களாக பல தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வந்தது. அதேபோல், சச்சின் பைலட் ஆதரவாளர்களும் மந்திரி சபையில் இடம் பிடிக்க முனைப்பு காட்டி வந்தனர். அதைத் தொடர்ந்து, மந்திரிசபையில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. 

முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் இல்லத்தில் மந்திரிசபை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில், டெல்லியில் இருந்து வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் பொறுப்பாளர் அஜய் மக்கானும் கலந்துகொண்டார். இந்த மந்திரிசபை கூட்டத்தில், காங்கிரஸ் மாநில தலைவரும், தொடக்கக் கல்வித் துறை மந்திரியுமான கோவிந்த்சிங் தோத்தாஸ்ரா மற்றும் இரு மந்திரிகள் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலில் அளித்தனர். அதைத் தொடர்ந்து அனைத்து மந்திரிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

இந்த நிலையில், ராஜஸ்தானின் புதிய மந்திரி சபை இன்று பதவியேற்றுக்கொண்டது. ஹேமராம் சவுத்ரி, மகேந்திரஜீத் சிங் மாளவியா, ராம்லால் ஜாட், மகேஷ் ஜோஷி மற்றும் விஸ்வேந்திர சிங்  உள்பட 15 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.  கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய மந்திரிகளுக்கு கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

Next Story