டெல்லியில் இன்று 29 பேருக்கு கொரோனா; 45 பேர் டிஸ்சார்ஜ்


டெல்லியில் இன்று 29 பேருக்கு கொரோனா; 45 பேர் டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 21 Nov 2021 5:42 PM GMT (Updated: 21 Nov 2021 5:42 PM GMT)

டெல்லியில் தற்போது 309 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, அங்கு படிப்படியாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. 

இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 14,40,666 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,095 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் டெல்லியில் இன்று ஒரே நாளில் 45 பேர் குணமடைந்துள்ளனர். 

இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,15,262 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 309 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story