இலவச அரிசி, கோதுமையை மேலும் 8 மாதம் நீட்டிக்க வேண்டும்: மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம்


இலவச அரிசி, கோதுமையை மேலும் 8 மாதம் நீட்டிக்க வேண்டும்: மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம்
x

கொரோனா கால உதவியாக இலவச அரிசி, கோதுமையை மேலும் 8 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார்.

புவனேஸ்வர், 

கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவும்வகையில், பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப்படி, 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. வழக்கமாக பெறும் மானிய விலை உணவு தானியத்துடன், கூடுதலாக தலா 5 கிேலா அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டது. அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்த இந்த இலவச உணவு தானிய வினியோகம், இம்மாதத்துடன் முடிவடைகிறது.

இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ கொரோனா முற்றிலும் ஒழியவில்லை. கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையை பொருளாதார நடவடிக்கைகள் இன்னும் எட்டவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கொரோனா காலத்தில் அனைவருக்கும் உணவு கிடைப்பதை இத்திட்டம்தான் உறுதி செய்தது. ஆகவே, இலவச உணவு தானியம் வழங்குவதை மேலும் 8 மாதங்களுக்காவது நீட்டிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். 


Next Story