மும்பையில் நேற்று புதிதாக 213 பேருக்கு கொரோனா பாதிப்பு


மும்பையில் நேற்று புதிதாக 213 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2021 10:35 PM GMT (Updated: 21 Nov 2021 10:35 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் தற்போது 9 ஆயிரத்து 799 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை,

மராட்டியத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 845 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 66 லட்சத்து 29 ஆயிரத்து 875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 64 லட்சத்து 75 ஆயிரத்து 682 பேர் குணமாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 9 ஆயிரத்து 799 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 97 ஆயிரத்து 482 பேர் வீடுகளிலும், 1,019 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் மேலும் 17 பேர் தொற்றுக்கு பலி ஆனார்கள். இதனால் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 739 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 97.67 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். இறப்பு விகிதம் 2.12 ஆக உள்ளது.

தலைநகர் மும்பையில் புதிதாக 213 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 3 பேர் பலியானார்கள். நகரில் இதுவரை 7 லட்சத்து 61 ஆயிரத்து 146 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 306 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 2 ஆயிரத்து 403 நாட்களாக உள்ளது. 12 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Next Story