தடுப்பூசி குறைவாக போட்டுள்ள 4 மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Nov 2021 10:41 PM GMT (Updated: 21 Nov 2021 10:41 PM GMT)

தடுப்பூசி குறைவாக போட்டுள்ள 4 மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு வரும் நிலை உள்ளது. இதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆனாலும்கூட புதுச்சேரி, நாகலாந்து, மேகாலயா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் தடுப்பூசியில் மந்தமான போக்கு உள்ளது. 

குறிப்பாக புதுச்சேரியில் 65.7 சதவீதத்தினரும், நாகலாந்தில் 49 சதவீதத்தினரும், மணிப்பூரில் 54.2 சதவீதத்தினரும், மேகாலயாவில் 56.7 சதவீதத்தினரும்தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். வீடுதோறும் தடுப்பூசியை சென்றடையச்செய்ய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அறிவுரையை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், 70 சதவீதத்துக்கும் குறைவாகவே தடுப்பூசி போட்டுள்ள புதுச்சேரி, நாகலாந்து, மேகாலயா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களுடன் இன்று மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்துகிறார். அங்கு தடுப்பூசி திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த அவர் வழிகாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story