சாலை பணிகள் தேக்கம்: ‘சிரிப்பு போராட்டம்’ நடத்திய பொதுமக்கள்


சாலை பணிகள் தேக்கம்: ‘சிரிப்பு போராட்டம்’ நடத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 Nov 2021 5:17 AM GMT (Updated: 22 Nov 2021 5:17 AM GMT)

சாலை பணிகள் தேக்கமடைந்ததை அரசின் கவனத்த்திற்கு கொண்டு செல்லும் வகையில் பொதுமக்கள் ‘சிரிப்பு போராட்டம்’ நடத்தினர்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் போபால் மாவட்டம் அரவிந்த் விஹார் பகுதியில் மோசமாக உள்ள சாலையை சீரமைக்க கடந்த 2019-ம் ஆண்டு மாநில அரசு சார்பில் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரவிந்த் விஹார் பகுதிகள் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால், சில மாதங்களிலேயே சாலை பணிகள் நடைபெறுவது நிறுத்தப்பட்டது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. 

இந்நிலையில், சாலை பணிகள் தேக்கமடைந்ததை கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அரவிந்த் விஹார் பகுதி பொதுமக்கள் நேற்று வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரவிந்த் விஹார் பகுதியில் நேற்று குவிந்த பொதுமக்கள் சாலையில் வரிசையாக நின்று ‘சிரிப்பு போராட்டம்’ நடத்தினர். சாலையில் 200 மீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்ற பொதுமக்கள் சாலை பணிகள் தேக்கத்தை கண்டிக்கும் விதமாகவும், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் வயிறு குலுங்க சிரித்து ‘சிரிப்பு போராட்டம்’ நடத்தினர்.     

Next Story