தேசிய செய்திகள்

முதல்வருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட நடிகை கைது + "||" + Actress arrested for posting video against CM

முதல்வருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட நடிகை கைது

முதல்வருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட நடிகை கைது
திரிபுரா முதலமைச்சருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட நடிகையும் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான சாயோனி கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அகர்தலா
 
திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது.  வரும் 25 ஆம் தேதி அகர்தலாவில் மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

திரிபுரா முதல் மந்திரி  பிப்லாப் தேவ்  அகர்தலாவில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, முதல் மந்திரியின் கூட்டத்தில், 50 பேருக்கும் குறைவானவர்களே கலந்து கொண் டிருக்கின்றனர்.  

அப்போது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான  சாயோனி கோஷ், அந்தப் பகுதியில் காரில் சென்றார்.

இதுகுறித்து சாயோனி கோஷ் தனது டுவிட்டரில், 

எங்கள் வேட்பாளரின் கூட்டங்களில் இதைவிட அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். பா.ஜ.க.வின் ஆட்சி முடிவுக்கு வருகிறது’ என்று டுவிட்டரில் கூறியிருந்தார் . கூடவே வீடியோவும் வெளியிட்டிருந்தார்.

இந்த  நிலையில் அகர்தலாவில், சாயோனி கோஷ் தங்கியிருந்த ஓட்டலுக்கு  திடீர் என வந்த பெண் போலீசார் விசாரணைக்காக, அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இதனால், திரிணாமுல் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். 25-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர், ஹெல்மெட் அணிந்து போலீஸ் ஸ்டேஷனில், திரிணாமுல் தொண்டர்களை சரமாரியாகத் தாக்கினர்.

பா.ஜ.க. தொண்டர்களை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக போலீசார், சாயோனி கோஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து  திரிபுரா கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு ஜெகதீஷ் ரெட்டி, சாயோனி கைஷ் மீதான குற்றச்சாட்டுக்கு  ஆதாரம் இருந்ததால் அவரை கைது செய்தோம் என கூறினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ்  மூத்த தலைவர் குணால் கோஷ், திரிபுராவில் காட்டாட்சி தர்பார் நடக்கிறது. போலீசார் முன்னிலையிலேயே நாங்கள் தாக்கப்பட்டோம். அவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்’ எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, அகர்தலாவுக்குப் புறப்பட்டார். ஆனால் திரிபுராவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காள அரசியல் நிலவரம் பீதியூட்டும்படி இருக்கிறது; கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு!
தான் கேட்ட கேள்விகளுக்கு மம்தா பானர்ஜி பதில் அளிப்பதில்லை என்று அம்மாநில கவர்னர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
2. மேற்கு வங்காளம்: விரைவு ரெயில் கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
மேற்கு வங்காளத்தில் கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
3. மேற்கு வங்காளம்: சாலை விபத்தில் 18 பேர் பலி
கடும் பனி மூட்டம் காரணமாக, எதிரே வந்த வாகனம் தெரியாததால், இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
4. ஒரே நேரத்தில் 4 இளம்பெண்களுடன் காதல்... ஒன்றாக வந்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி
இளைஞரின் நான்கு பெண் தோழிகள் ஒன்றாக வந்துள்ளனர். இதனைக் கண்டு அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
5. மே.வங்காளத்தில் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும்; மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.