கங்கனாவிற்கு வழங்கப்பட்ட ‘பத்மஸ்ரீ’ விருதை திரும்பப்பெறுக - ஜனாதிபதிக்கு சீக்கிய அமைப்பு கடிதம்


கங்கனாவிற்கு வழங்கப்பட்ட ‘பத்மஸ்ரீ’ விருதை திரும்பப்பெறுக - ஜனாதிபதிக்கு சீக்கிய அமைப்பு கடிதம்
x
தினத்தந்தி 22 Nov 2021 6:01 AM GMT (Updated: 22 Nov 2021 6:01 AM GMT)

நடிகை கங்கனா ரனாவத்திற்கு வழங்கப்பட்ட 'பத்மஸ்ரீ’ விருதை திரும்பப்பெற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு சீக்கிய அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

புதுடெல்லி,

2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த மாதம் வழங்கப்பட்டது. மொத்தம் 119 பேருக்கு ஜனாதிபதி பத்ம விருதுகளை வழங்கினார். அதில் இந்தி நடிகை கங்கனா ரனாவத்திற்கு ‘பத்மஸ்ரீ’ விருந்து வழங்கப்பட்டது.

இதற்கிடையில், கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாக பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 

சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி. இந்தியாவுக்கு 2014-ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றும் கூறியிருந்தார். 1947-ஆம் ஆண்டு கிடைத்தது பிச்சை தான் என்றும் தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. மேலும், அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப்பெற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.

இந்நிலையில், கங்கனா ரனாவத்திற்கு வழங்கப்பட்ட 'பத்மஸ்ரீ’ விருதை திரும்பப்பெற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு சீக்கிய அமைப்பு கடித்தம் எழுதியுள்ளது.

விவசாயிகள், சுதந்திரபோராட்ட வீரர்களை அவமதித்தும், மத வன்முறையை தூண்டும் வகையிலும் கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்து வருவதால் அவருக்கு வழங்கப்பட்ட ‘பத்மஸ்ரீ’ விருதை ஜனாதிபதி திரும்பப்பெற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு டெல்லியை சேர்ந்த சீக்கிய அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.  

Next Story