பொது சிவில் சட்டத்துக்கு முஸ்லிம் தனிநபர் வாரியம் எதிர்ப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Nov 2021 8:08 PM GMT (Updated: 22 Nov 2021 8:08 PM GMT)

பொது சிவில் சட்டத்துக்கு முஸ்லிம் தனிநபர் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கான்பூர், 

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் 2 நாள் மாநாடு நடைபெற்றது. அதில், பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு வாரிய நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து வாரியத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் காசிம் ரசூல் இலியாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மத நம்பிக்கைகளை கடைபிடிக்க அரசியல் சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொது சிவில் சட்டம், இந்த அடிப்படை உரிமைக்கு முரணாக உள்ளது. இந்தியா போன்ற பல மதங்கள் கொண்ட நாட்டுக்கு பொது சிவில் சட்டம் பொருத்தமாகவோ, பயனுள்ளதாகவோ இருக்காது. எனவே, இதை முஸ்லிம் சமூகம் மீது திணிக்க வேண்டாம். இதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவர் கூறினார்.


Next Story