தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள்: பா.ஜனதாவினரின் முரண்பாடான கருத்துகளை தடுத்து நிறுத்துங்கள் - மாயாவதி + "||" + BJP leaders should desist from making provocative statements on farm laws: Mayawati

வேளாண் சட்டங்கள்: பா.ஜனதாவினரின் முரண்பாடான கருத்துகளை தடுத்து நிறுத்துங்கள் - மாயாவதி

வேளாண் சட்டங்கள்: பா.ஜனதாவினரின் முரண்பாடான கருத்துகளை தடுத்து நிறுத்துங்கள் - மாயாவதி
வேளாண் சட்டங்கள் ரத்து விவகாரம் தொடர்பான பா.ஜனதாவினரின் முரண்பாடான கருத்துகளை தடுத்து நிறுத்துங்கள் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
லக்னோ, 

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பிரதமர் மோடி, விவசாயிகளின் இதர நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும். அவற்றுக்கு விரைவில் தீர்வு கண்டால், விவசாயிகள் திருப்தியுடன் வீடு திரும்புவார்கள். இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவார்கள்.

அதே சமயத்தில், பிரதமரின் அறிவிப்பையும் மீறி, சில பா.ஜனதா தலைவர்கள் முரண்பாடான கருத்துகளை தெரிவித்து, மக்கள் மனதில் சந்தேகத்தை உருவாக்கி வருகிறார்கள். இதனால் நல்லெண்ண சூழ்நிலை சீரழிகிறது. ஆகவே, அவர்கள் பேசுவதை பா.ஜனதா மேலிடம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாய்களை பராமரிப்பது குறித்த விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு முன் உதாரணமாக திகழ வேண்டும்
தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களை பராமரிப்பது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கி, நாட்டிலேயே தமிழ்நாடு அரசு முன்னுதாரணமாக திகழவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து கூறியுள்ளது.
2. தனுஷ் ஐஸ்வர்யா குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து
இரு தினங்களுக்கு முன்பு தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருந்தனர் இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
3. ‘எதற்கும் உதவாத கட்டுக்கதைகளின் கூட்டு தொகுப்பு' கவர்னர் உரை குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து
கவர்னர் உரை, எதற்கும் உதவாத கட்டுக்கதைகளின் கூட்டு தொகுப்பு என்று ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
4. பதவியில் இல்லாத அமைச்சர்கள், நீதிபதிகள் வாகனத்தில் அரசு சின்னத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்
பதவியில் இல்லாத அமைச்சர்கள், நீதிபதிகள் வாகனத்தில் அரசு சின்னத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் ஐகோர்ட்டு கருத்து.
5. மாநில பொருளாதார வளர்ச்சி கடவுளின் சொத்துகள் மூலம் இருக்கக்கூடாது ஐகோர்ட்டு கருத்து
கோவில் சொத்துகளை தனியார் பயன்பாட்டுக்கு வழங்கும்போது அரசு நிதானமாக முடிவு எடுக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது கடவுளின் சொத்துகள் மூலமாக இருக்கக்கூடாது என்றும் சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.