தேசிய செய்திகள்

ஆந்திராவில் கனமழைக்கு 34 பேர் பலி: 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம் + "||" + 34 die, 10 missing as floods wreck havoc in Andhra Pradesh

ஆந்திராவில் கனமழைக்கு 34 பேர் பலி: 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்

ஆந்திராவில் கனமழைக்கு 34 பேர் பலி: 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்
ஆந்திராவில் கனமழைக்கு 34 பேர் பலியானதுடன், 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயவாடா, 

ஆந்திர சட்டசபையில் அம்மாநில வேளாண்துறை மந்திரி கொரசாலா கண்ணபாபு ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆந்திராவில் 4 மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 34 பேர் இறந்துள்ளனர். இன்னும் 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 8 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 5 லட்சத்து 33 ஆயிரம் விவசாயிகள் பயிர் சேதத்தை சந்தித்துள்ளனர். பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

பலியான கால்நடைகள் மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கும் இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் இன்று மேலும் 14,440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2. ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும் விமான நிலையங்கள்... முதல்-மந்திரியின் திட்டம்!
ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும் விமான நிலையங்கள் அமைக்க முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. ஆந்திராவில் இன்று மேலும் 10,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
4. ஆந்திரா, தெலுங்கானாவில் புத்தாண்டையொட்டி ரூ.296 கோடிக்கு மது விற்பனை
புத்தாண்டையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவில் ரூ.296 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
5. துருக்கி காதலியை இந்துமத முறைப்படி திருமணம் செய்த ஆந்திர இளைஞன்...!
துருக்கியை சேர்ந்த தனது காதலியை இந்து மத முறைப்படி ஆந்திராவை சேர்ந்த இளைஞன் திருமணம் செய்துள்ளார்.