ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா அதிரடி... புதிய கட்டண உயர்வு அறிவிப்பு


ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா அதிரடி... புதிய கட்டண உயர்வு அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2021 11:43 AM GMT (Updated: 23 Nov 2021 11:43 AM GMT)

ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் புதிய கட்டண உயர்வுக்கான திட்டங்களை அறிவித்து உள்ளது.


மும்பை,

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், கடந்த ஜூலை மாதத்தில் போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கான கட்டண விகிதங்களை அதிகரித்து இருந்தது.  இந்த நிலையில், பிரீபெய்டு சேவைக்கான கட்டணங்களை 20-25 சதவீத அளவுக்கு உயர்த்தி அறிவித்துள்ளது.  டாப் அப் திட்டங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரூ.79 திட்டம் ரூ.99 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* 48 ரூபாய் திட்டம், 58 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஜிபி டேட்டா கிடைக்கும்.

* 98 ரூபாய் திட்டம், 118 ரூபாயாகவும், 251 ரூபாய் திட்டம், 301 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

* இலவச கால் வசதியுடன் கூடிய டேட்டா திட்டத்திற்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. 

* 28 -நாட்கள் கொண்ட 298 ரூபாய் திட்டம் 359 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

* 399 -ரூபாய் திட்டத்தினை, 479 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

* 379- ரூபாய் திட்டத்தினை, 455 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், 6 ஜிபி டேட்டா கிடைக்கும்.

* 598- ரூபாய் திட்டத்தினை, 719 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

* 698 -ரூபாய் திட்டத்தினை, 839 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

* 1498- ரூபாய் திட்டத்தினை, 1799 ஆக அதிகரித்துள்ளது. இது 365-நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். அன்லிமிடெட்டு கால் சேவை, தினசரி 100 எஸ்.எம்.எஸ், 24 ஜிபி டேட்டா கிடைக்கும். 

* 2498- ரூபாய் திட்டத்தினை 2999- ஆக அதிகரித்துள்ளது. இதுவும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். அன்லிமிடெட்டு கால் சேவை, தினசரி 100 எஸ்.எம்.எஸ், தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் நிறுவனம் விலை உயர்வு அறிவித்த நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனமும், புதிய கட்டண உயர்வு பற்றிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டு உள்ளது.

இதன்படி, இந்தியாவில் வருகிற 25ந்தேதி முதல் (நாளை மறுநாள்) பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான புதிய கட்டண முறைகள் நடைமுறைக்கு வருகின்றன.

இதுவரை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.79 கட்டணத்திலான திட்டம் ரூ.99க்கும் (டாக்டைம் திட்டம்), டேட்டாவுடன் கூடிய 365 நாட்களுக்கான திட்டம் (அன்லிமிடெட் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்.கள், ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி. டேட்டா) ரூ.2,358ல் இருந்து ரூ.2,899க்கும் உயர்த்தப்பட்டு உள்ளது.


இதேபோன்று, குறைந்தபட்ச டேட்டா டாப் அப் திட்டத்தின் விலை ரூ.48ல் இருந்து ரூ.58 (28 நாட்கள், 3 ஜி.பி.) ஆக உயர்த்தப்படுகிறது.  56 நாட்களுக்கான திட்டத்தின் விலை ரூ.351ல் இருந்து ரூ.418 (28 நாட்கள், 3 ஜி.பி.) ஆக உயர்த்தப்படுகிறது.  இதனால், வாடிக்கையாளர்களின் நிலை திண்டாட்டமடைந்து உள்ளது.


Next Story