தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு + "||" + Kerala clocks 4,972 new COVID-19 cases, 370 deaths

கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு

கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,972- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,972- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள் கிழமை தொற்று பாதிப்பு 3,698- ஆக இருந்த நிலையில், இன்று பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. 

கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “ கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்  370- பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,045- ஆக உயர்ந்துள்ளது.

 கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 97 ஆயிரத்து 845- ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 5,978- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 18 ஆயிரத்து 279- ஆக உயர்ந்துள்ளது.  கேரளாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 52,710- ஆக உள்ளது. 

மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில்  917- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திரிசூர் மாவட்டத்தில் 619- பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 527- பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில்  60,265-  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் 49 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
2. கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் - சுகாதார துறை மந்திரி
கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்று சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
3. மிரட்டும் கொரோனா; இந்தியாவில் 4 கோடியை கடந்த பாதிப்பு!!
அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை உள்ளது.
4. இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
5. பிரான்சில் ஒரேநாளில் 5 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு...!!
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,01,635 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.