கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்


கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 3:56 PM GMT (Updated: 23 Nov 2021 3:56 PM GMT)

கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணயம் ஒழுங்கு முறை -2021 புதிய சட்ட மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

வரும்  பாராளுமன்ற  குளிர்கால கூட்டத்தொடரில் டிஜிட்டல் நாணயம் கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை இந்தியாவில் தடை செய்யவும் மசோதாக்களில் வழி வகை செய்யப்பட உள்ளது.

இந்திய கிரிப்டோ கரன்சியை ரிசர்வ் வங்கி உருவாக்கும். இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாயணத்திற்கான கட்டமைப்பை ரிசர்வ் வங்கி உருவாக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கி மூலம் கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணயம் ஒழுங்கு முறை -2021 புதிய சட்ட மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

Next Story