தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 35 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்..!! + "||" + 35% MLAs in Uttar Pradesh have criminal cases, says ADR Report

உத்தரபிரதேசத்தில் 35 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்..!!

உத்தரபிரதேசத்தில் 35 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்..!!
உத்தரபிரதேசத்தில் 35 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லக்னோ, 

மொத்தம் 403 இடங்களை கொண்ட உத்தரபிரதேச சட்டசபையின் நடப்பு 396 எம்.எல்.ஏ.க்களின் நிதிநிலை, குற்ற வழக்கு பின்னணி மற்றும் பிற விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. உத்தரபிரதேச தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, நடப்பு எம்.எல்.ஏ.க்கள் 140 பேர் மீது, அதாவது 35 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதேபோல 27 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது தீவிரமான குற்ற வழக்குகள் இருக்கின்றன.

கட்சிவாரியாக பார்த்தால், பா.ஜ.க.வின் 304 எம்.எல்.ஏ.க்களில் 106 பேர் மீதும், சமாஜ்வாடி கட்சியின் 18, பகுஜன் சமாஜ் கட்சியின் 2, காங்கிரஸ் கட்சியின் 1 எம்.எல்.ஏ. மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேச சட்டசபையில் 313 எம்.எல்.ஏ.க்கள் அதாவது 79 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ள தகவலும் வெளியாகி இருக்கிறது.

அதில் பா.ஜ.க.வில் அதிகபட்சமாக 235 எம்.எல்.ஏ.க்களும், 2-வது இடத்தில் உள்ள சமாஜ்வாடி கட்சியில் 42 எம்.எல்.ஏ.க்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதிக கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சிகளின் பட்டியலில் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. உ.பி.யை காட்டாட்சிக்கு தள்ளிய எதிர்கட்சியினர்: மாயாவதி குற்றச்சாட்டு
பகுஜன் சமாஜ் கட்சியை தவிர எல்லா கட்சிகளும், உத்தரபிரதேசத்தை காட்டாட்சிக்கு தள்ளி விட்டதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
2. உத்தரபிரதேசத்தில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன - அகிலேஷ் யாதவ்
உத்தரபிரதேசத்தில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
3. நடத்தையில் சந்தேகம்: 2-வது மனைவியை கொலை செய்த கொலை குற்றவாளி
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கொலை குற்றவாளி தனது 2-வது மனைவியை கொலை செய்துள்ளார்.
4. உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 125 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பிரியங்கா காந்தி..!
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்காக 125 காங்கிரஸ் வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பிரியங்கா வெளியிட்டார்.
5. 3-வது நாளாக உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா
உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா செய்தார். புதிதாக ஒரு பா.ஜனதா எம்.எல்.ஏ., கட்சியை விட்டு விலகினார்.