தேசிய செய்திகள்

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்..! + "||" + Kerala High Court notice to Centre on plea for removal of PM Narendra Modi photo from COVID vaccine certificate

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்..!

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்..!
தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கக்கோரி வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கொச்சி, 

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பீட்டர் மயாலிபரம்பில். மூத்த குடிமகனான இவர், கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில், ‘‘நான் 2 டோஸ் தடுப்பூசிகளையும் பணம் செலுத்தி போட்டுக்கொண்டேன். எனவே, தடுப்பூசி சான்றிதழ், எனது தனிப்பட்ட சொத்து. அதில், பிரதமர் மோடியின் புகைப்படத்தை பொறிப்பது, தனிநபரின் தனியுரிமையில் குறுக்கிடும் செயல். ஆகவே, மோடி புகைப்படத்தை நீக்க வேண்டும்’’ என்று அவர் கூறியுள்ளார். 

இந்த மனு, நீதிபதி என்.நாகரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்பதாக கூறிய நீதிபதி, மத்திய, மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்காததால் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்வதில் சிக்கல்
கொரோனா தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்காததால் மாணவ -மாணவிகள் கல்லூரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
2. தடுப்பூசி சான்றிதழ், வெளிநாட்டு பயணத்துக்கு முக்கியம்: மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
என்ன தடுப்பூசி போட்டுக்கொண்டீர்கள் என்பதைவிட, தடுப்பூசி சான்றிதழ்தான் வெளிநாட்டுப்பயணத்துக்கு முக்கியம் என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
3. தடுப்பூசி சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை
தடுப்பூசி சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேசி வருவதாக வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.