தேசிய செய்திகள்

வேதா இல்லம் வழக்கு: சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு + "||" + Veda Illam case Chennai High Court verdict today

வேதா இல்லம் வழக்கு: சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு

வேதா இல்லம் வழக்கு: சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னை, 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். 

அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. 

மேலும் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை, வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று பிற்பகல் 2:15 மணிக்கு பிறப்பிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேதா இல்லம் வழக்கு: சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு....!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டத்திற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
2. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், வழக்கு தொடர உரிமை இல்லை - சென்னை ஐகோர்ட்டு
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர சட்டரீதியாக் உரிமை இல்லை என சென்னை ஐகோர்ட்டு கூறி உள்ளது.
3. அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. விநாயகர் சதுர்த்தி கோரிக்கை நிராகரிப்பு!- சென்னை ஐகோர்ட்டு
விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிப்பு என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
5. மகப்பேறு விடுப்பு : எந்த பாகுபாடும் காட்ட கூடாது தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
வரன்முறைப்படுத்தப்படாத அரசு ஊழியர்களுக்கு இடையில் எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது என சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.