தேசிய செய்திகள்

மணக்கோலத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய பெண் - காத்திருந்த மணமகன் + "||" + Rajkot bride puts studies over wedding, appears for university exam first

மணக்கோலத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய பெண் - காத்திருந்த மணமகன்

மணக்கோலத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய பெண் - காத்திருந்த மணமகன்
திருமணமும், தேர்வும் ஒரேநாளில் வந்ததால் மணக்கோலத்தில் வந்து பெண் தேர்வு எழுதினார்.
காந்திபுரம்,

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஷிவாங்கி பக்தாரியா. இவர் ராஜ்கோட்டில் உள்ள சாந்தி நிகிதன் கல்லூரியில் இளநிலை சமூகப்பணி பட்டபடிப்பு படித்து வந்தார்.

இதற்கிடையில், ஷிவாங்கிக்கும் பார்த் படாலியா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக்கும் நவ.24-ம் தேதி (நேற்று) திருமணம் நடத்த இருதரப்பு பெற்றோரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னறே முடிவெடுத்தனர். ஆனால், இதேநாளில் (நவ.24) ஷிவாங்கி பயின்று வரும் இளநிலை சமூகப்பணி பட்டபடிப்பின் செமஸ்டர் தேர்வு வந்தது. திருமணமும், செமஸ்டர் தேர்வும் ஒரேநாளில் வந்ததால் ஷிவாங்கி மிகவும் குழப்பம் அடைந்தார்.

இது குறித்து இரு குடும்பத்தினருமும் ஷிவாங்கி தனது நிலைமையை எடுத்துக்கூறினார். மேலும், செமஸ்டர் தேர்வை எழுத வேண்டும் என்ற முடிவில் ஷிவாங்கி உறுதியாக இருந்தார். இது குறித்து தனது வருங்கால கணவரிடமும் அவர் எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து செமஸ்டர் தேர்வு எழுதிய பின்னர், சில மணி நேரம் கழித்து திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று இரு தரப்பு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், திருமணமும் அதேநாளில் நடைபெறுவதால் ஷிவாங்கி தனது செமஸ்டர் தேர்வை எழுத மணப்பெண் கோலத்தில் தேர்வு மையத்திற்கு வந்தார். அவர் மணக்கோலத்தில் தேர்வு அறைக்கு சென்று செமஸ்டர் தேர்வை எழுதினார். 

ஷிவாங்கியின் வருங்கால கணவரான பாரத் படாலியா மணக்கோலத்தில் தேர்வு மையத்திற்கு வந்திருந்தார். ஷிவாங்கி தேர்வு பார்த் படாலியா தேர்வு மையத்திலேயே காத்திருந்தார். தேர்வுக்கு பின்னர் ஷிவாங்கிக்கும், பார்த் படாலியாவுக்கும் திருமணம் நடைபெற்றது.    

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்: டயர் வெடித்து பஸ் மீது மோதிய கார் - 6 பேர் பலி
குஜராத்தில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் பஸ் மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
2. கொரோனா பாதிப்பு 202 நாட்கள் தொடர் சிகிச்சை;வீடு திரும்பிய பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.
3. குஜராத்: வேன்-டேங்கர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வேன்-டேங்கர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.
4. காதலியுடன் பேசியதால் சேலை அணிவித்து மரத்தில் கட்டிவைத்து வாலிபர் அடித்துக்கொலை
காதலியுடன் பேசியதால் பெண்ணின் குடும்பத்தினர் வாலிபரை மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. 120 கிலோ போதைப்பொருள் பறிமுதல் :குஜராத் தீவிரவாத தடுப்புப் படை அதிரடி
கடந்த செப்டம்பர் மாதம் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 3,000 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது