சர்வதேச விமான சேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்; மத்திய அரசு


சர்வதேச விமான சேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்;  மத்திய அரசு
x
தினத்தந்தி 24 Nov 2021 10:16 AM GMT (Updated: 24 Nov 2021 10:16 AM GMT)

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது.

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது.

 தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் தற்போது வரை விமானபோக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.  ”ஏர்  பபுள்” என்ற கொரோனா தடுப்பு விதிகளுடன் 25 நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மட்டுமே விமானங்கள்  இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தொற்று பரவல்  குறைந்து பெரும்பாலான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. 

இந்த நிலையில்,  நடப்பு ஆண்டு  இறுதிக்குள், சர்வதேச விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக விமான போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ் பன்சால் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் கூறுகையில், “ இயல்புநிலைக்கு திரும்புவதில் அரசு கவனம் செலுத்திவரும் அதே சமயத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, பல ஐரோப்பிய நாடுகளில் அச்சப்படக் கூடிய அளவில் கொரோனா அதிகரித்துள்ளது” என்றார். 


Next Story