தேசிய செய்திகள்

"நேற்று நீ தப்பித்துவிட்டாய்" - இரண்டாவது முறையாக கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் + "||" + Intended to kill you: Gautam Gambhir gets another email this time with video shot outside his home

"நேற்று நீ தப்பித்துவிட்டாய்" - இரண்டாவது முறையாக கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

"நேற்று நீ தப்பித்துவிட்டாய்" - இரண்டாவது முறையாக கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்
இரண்டாவது முறை மிரட்டல் விடுத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கம்பீரின் வீட்டை வீடியோ எடுத்து சிறிது வினாடிகள் ஓடக் கூடிய வீடியோவுடன் மிரட்டல் விடுத்துள்ளனர்.
டெல்லி 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கு, காஷ்மீர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர். இது குறித்த செய்தி இன்று காலை வெளியானது.

கவுதம் கம்பீர் , ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து தனக்கு வந்த மின்னஞ்சல் குறித்த தகவலை டெல்லி போலீசாருக்கு தெரிவித்தார்.இதனை தொடர்ந்து டெல்லி காவல்துறை கவுதம் கம்பீரின் வீட்டுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் வந்துள்ளது.

அதில் , "நாங்கள் உன்னைக் கொல்ல நினைத்தோம், ஆனால் நீ தப்பித்துவிட்டாய் .உங்கள் குடும்ப வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், அரசியலில் இருந்தும் காஷ்மீர் பிரச்சனையிலிருந்தும் விலகி இருங்கள்" என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை மிரட்டல் விடுத்துள்ள  ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கம்பீரின் வீட்டை வீடியோ எடுத்து சிறிது வினாடிகள் ஓடக் கூடிய  வீடியோவுடன் மிரட்டல் விடுத்துள்ளனர்.

அவரது வீட்டுக்கு மேலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள போலீசார் தற்போது அவருக்கு வந்த மிரட்டல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 'ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ பயங்கரவாத அமைப்பிடமிருந்து கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்
'ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து பாஜக எம்.பி. கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
2. விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்ததாக புகார்: நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
விவசாயிகளை தீவிரவாதிகள் என்று விமர்சனம் செய்ததாக நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3. ரகானே இந்திய அணியில் இருப்பதே அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்- கம்பீர் கிண்டல்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் அஜிங்கியா ரகானே கேப்டனாக செயல்படவுள்ளார்.
4. காற்று மாசு: 6 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?- கெஜ்ரிவாலுக்கு கம்பீர் கேள்வி
டெல்லி அரசு பொதுப் போக்குவரத்திலோ உள்கட்டமைப்பிலோ முதலீடு செய்யவில்லை என கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.
5. ஜம்மு காஷ்மீர்;வெடிகுண்டு வீசி தாக்குதல்-பொதுமக்கள் படுகாயம்..!
ஜம்மு காஷ்மீரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்.