தேசிய செய்திகள்

நம்பர் பிளேட் இல்லாமல் வந்த ஐதராபாத் எம்.பி.யின் காருக்கு அபராதம்சோலாப்பூர் போலீசார் அதிரடி + "||" + Solapur cops collect Rs 200 fine from Owaisis car driver

நம்பர் பிளேட் இல்லாமல் வந்த ஐதராபாத் எம்.பி.யின் காருக்கு அபராதம்சோலாப்பூர் போலீசார் அதிரடி

நம்பர் பிளேட் இல்லாமல் வந்த ஐதராபாத் எம்.பி.யின் காருக்கு அபராதம்சோலாப்பூர் போலீசார் அதிரடி
நம்பர் பிளேட் இல்லாமல் வந்த ஐதராபாத் எம்.பி.யின் காருக்கு சோலாப்பூர் போலீசார் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
மும்பை,
நம்பர் பிளேட் இல்லாமல் வந்த ஐதராபாத் எம்.பி.யின் காருக்கு சோலாப்பூர் போலீசார் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். 
 நம்பர் பிளேட்
 ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி நேற்று சோலாப்பூர் நகருக்கு வந்தார். அங்கு சதார் பஜார் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க சென்றார். அப்போது வெளியே நிறுத்தப்பட்ட எம்.பி.யின் காரின் முன்பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பதை, அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தான்கிதி என்பவர் கவனித்தார். 
 இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக எம்.பி.யின் கார் டிரைவரிடம் ரூ.200 அபராதம் செலுத்தும்படி கூறினார். 
 பரபரப்பு 
இந்த சம்பவம் குறித்து அறிந்த அசாதுதீன் ஒவைசி எம்.பி.யின் ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். இதனால் பரபரப்பு சூழல் உருவானதால் அங்கு போலீஸ் அதிகாரிகளும் விரைந்து வந்தனர். ஆனால் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.பி.யின் காருக்கு அபராதம் விதிப்பதில் உறுதியாக இருந்தார். இதனால் வேறு வழியின்றி எம்.பி.யின் கார் டிரைவர் ரூ.200 அபராதம் செலுத்தினார்.
இந்தநிலையில் எம்.பி.யின் காருக்கு துணிச்சலுடன் அபராதம் விதித்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தான்கிதியை சோலாப்பூர் நகர போலீஸ் கமிஷனர் ஹரிஷ் பைஜால் நேரில் அழைத்து ரூ.5 ஆயிரமும் வெகுமதி அளித்து பாராட்டினார்.