அரியானா: வேளாண் சட்ட வெற்றியை கொண்டாட டெல்லி செல்லும் விவசாயிகள்


அரியானா: வேளாண் சட்ட வெற்றியை கொண்டாட டெல்லி செல்லும் விவசாயிகள்
x
தினத்தந்தி 25 Nov 2021 2:26 PM GMT (Updated: 25 Nov 2021 2:26 PM GMT)

ஆயிரக்கணக்கான விவசாயிகள், நடனமாடியும், பாடியும், வேளான் சட்டங்களை வென்றதைக் கொண்டாட டெல்லிக்குச் செல்கிறார்கள்

அரியானா,

தேசிய தலைநகர் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகளின் கிட்டத்தட்ட ஒரு வருட போராட்டத்திற்குப் பிறகு, சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நவம்பர் 29ஆம் தேதி முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரை மத்திய அரசு கூட்டுகிறது.

விவசாயச் சட்டங்களுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடுவதற்காக, ஹரியானா மாநிலம் சிர்சாவில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், நடனமாடியும், பாடியும் டெல்லிக்கு அணிவகுத்துச் செல்கின்றனர்.

சிர்சா மாவட்டத்தின் ஷாஹீத் பகத் சிங் ஸ்டேடியத்தில் இருந்து விவசாயிகள் டெல்லி எல்லைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மற்றும் சிர்சாவில் இருந்து ஏராளமான விவசாயிகள் கார்கள் மற்றும் டிராக்டர்களில் டெல்லிக்கு புறப்பட்டனர். இதர கோரிக்கைகளையும் ஏற்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க விவசாயிகள் எல்லையை அடைவதாக கூறப்படுகிறது.

அரியானா விவசாயிகள் சங்க மாநில தலைவர் பிரகலாத் சிங் பருகேடா கூறுகையில், “விவசாய சட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் ஓராண்டாக போராடி வருகின்றனர். விவசாயிகள் கொடுத்த அழுத்தத்தால், அரசாங்கம் மூன்று சட்டங்களையும் ரத்து செய்தது. 

மேலும், இது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதனால்தான் உற்சாகமான விவசாயிகள் ஆடியும் பாடியும் டெல்லிக்கு அணிவகுத்துச் செல்கிறார்கள்.


Next Story