அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Nov 2021 3:17 PM GMT (Updated: 2021-11-25T20:47:08+05:30)

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக இன்று புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதுடெல்லி,

2011 இல் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. சமூகப் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவார். இவர் புனேவில் இருந்து 87 கிமீ தொலைவில் உள்ள மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் தங்கி வருகிறார்.

இந்த நிலையில் 84 வயதான அன்னா ஹசாரேவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக புனேவிலுள்ள மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டார். தற்போது அன்னா ஹசாரேவில் உடல்நிலை சீராக உள்ளது என்று ரூபி ஹால் கிளினிக்கின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அவ்துத் போதம்வாட் தெரிவித்துள்ளார்.


Next Story