இந்தியாவில் இருந்து தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி


இந்தியாவில் இருந்து தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி
x
தினத்தந்தி 26 Nov 2021 1:06 AM GMT (Updated: 26 Nov 2021 1:06 AM GMT)

போதுமான கையிருப்பு இருப்பதால், கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை வணிக நோக்கத்துடன் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. புனேவில் உள்ள சீரம் நிறுவனம், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. சீரம் நிறுவனம் தன்னிடம் 24 கோடியே 89 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும், நாள்தோறும் கையிருப்பு அதிகரித்து வருவதாகவும் சமீபத்தில் மத்திய அரசிடம் தெரிவித்தது. 

அதுபோல், கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பும் அதிகமாக உள்ளது. எனவே, கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை வணிக நோக்கத்துடன் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதவிர, ஐ.நா. ஆதரவுடன் நடக்கும் ‘கோவாக்ஸ்’ என்ற சர்வதேச தடுப்பூசி திட்டத்துக்கும் இந்திய தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story