இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் சீனா கடும் ஆட்சேபம்


இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் சீனா கடும் ஆட்சேபம்
x
தினத்தந்தி 26 Nov 2021 6:28 AM GMT (Updated: 26 Nov 2021 6:28 AM GMT)

இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதற்கு சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

பாகிஸ்தானை விடவும் சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று பிபின் ராவத் கூறியிருந்தார். வடக்கு எல்லை பகுதியில் சீனா படைகளைக் குவித்து வருவதாகவும் அங்கு ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் பிபின் ராவத் கூறியிருந்தார். 

இதற்கு சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது. பொறுப்பற்ற அபாயகரமான கருத்து என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த கர்னல் வு கியான் கூறியதாவது:-

இந்திய அதிகாரிகள் சீன ராணுவ அச்சுறுத்தல் என்று கூறுவது ஊகங்கள் மட்டுமே . ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லாமல், புவிசார் அரசியல் மோதலைத் தூண்டிவிடுவது பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது. இந்தியாவும் சீனா ஒன்றுக்கு ஒன்று அச்சுறுத்தலாக இல்லை என கூறினார்.

Next Story