இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்; பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்


இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்; பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்
x
தினத்தந்தி 26 Nov 2021 11:47 AM GMT (Updated: 26 Nov 2021 11:47 AM GMT)

மும்பை தாக்குதலின் 13-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் மும்பையின் பல்வேறு இடங்களில் கடந்த 2012-ம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 26) பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்து தாஜ் ஓட்டல் உள்பட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள்,  வெளிநாட்டினர், பாதுகாப்பு படையினர் என மொத்தம் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் 9 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாபிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மும்பை தாக்குதலின் 13-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கு, வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. அப்போது, மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் நடக்கும் வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன், தனது கட்டுப்பாட்டில் உள்ள மண்ணை, இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மிகவும் கொடூரமான இந்த தாக்குதல் விவகாரத்தில், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமல், பாகிஸ்தான் அக்கறையின்றி செயல்படுவது வேதனையான விஷயம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story