மராட்டியத்தில் மார்ச் மாதம் பாஜக ஆட்சி அமைக்கும்: மத்திய மந்திரி கருத்தால் பரபரப்பு


மராட்டியத்தில் மார்ச் மாதம் பாஜக ஆட்சி அமைக்கும்: மத்திய மந்திரி கருத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Nov 2021 4:37 PM GMT (Updated: 26 Nov 2021 4:37 PM GMT)

வரும் மார்ச் மாதத்திற்குள் மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய மந்திரி நாரயண் ரானே தெரிவித்துள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த நிலையில், வரும் மார்ச் மாதத்திற்குள் மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய மந்திரி நாரயண் ரானே தெரிவித்துள்ளார். 

 மராட்டிய பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்  மற்றும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் பிராபுல் படேல் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், நாராயண் ரானேவின் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. 

மத்திய மந்திரி நாராயண் ரானேவின் கருத்து பற்றி  மராட்டிய பாஜக தலைவர்களில் ஒருவரான சந்திரகாந்த் பாடீலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்திரகாந்த் பாட்டீல்,   நாராயண் ரானேவின் கருத்து உண்மையாகும் என நம்புகிறேன் என்றார். 

அதேவேளையில், காங்கிரஸ் கட்சி இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மராட்டியத்தில் மாகா விகாஸ் கூட்டணி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் எனவும், பாஜக தொடர்ந்து மிகப்பெரிய கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், அது உண்மையாக போவது இல்லை”எனத்தெரிவித்துள்ளது. 


Next Story