தேசிய செய்திகள்

வரும் 29ந்தேதி வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021 தாக்கல் + "||" + The draft bill to repeal the agrarian laws will be tabled on the 29th

வரும் 29ந்தேதி வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021 தாக்கல்

வரும் 29ந்தேதி வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021 தாக்கல்
வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021, வருகிற 29ந்தேதி குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை அன்று 3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.  மேலும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான குழு ஒன்றும் அமைக்கப்படும் என்றும் கூறினார்.  இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதன்பின்பு, கடந்த 24ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரைவு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டது.  இதனால் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பட்டியலில்  வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021 இடம்பெற்று உள்ளது.

இதன்மூலம், இம்மாதம் 29ந்தேதி தொடங்க உள்ள மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும்  ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன்படி, வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021, வருகிற 29ந்தேதி குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஒமைக்ரான் கட்டுப்பாடு எதிரொலி; நியூசிலாந்து பிரதமர் திருமணம் ரத்து
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், நியூசிலாந்து பிரதமர் தனது திருமண நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.
2. தொற்று அதிகரிக்கும் நிலையில் கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கு ரத்து
கர்நாடகாவில் தொற்று அதிகரிக்கும் நிலையில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.
3. தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு திடீர் ரத்து..!
ஒமைக்ரான் வைரஸ் உச்சம் தொட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்க உத்தரவு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. ஒமைக்ரான் பாதிப்பு; உலகம் முழுவதும் 2,500 விமானங்கள் ரத்து
ஒமைக்ரான் பாதிப்புகளை முன்னிட்டு உலகம் முழுவதும் 2,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், 5,200 விமானங்கள் காலதாமதத்துடனும் இயக்கப்பட்டன.
5. வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து: மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.