சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஏற்றுமதி மீண்டும் தொடக்கம்


சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஏற்றுமதி மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 27 Nov 2021 12:24 AM GMT (Updated: 27 Nov 2021 12:24 AM GMT)

சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை மீண்டும் தொடங்கி உள்ளது.



புதுடெல்லி,


சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி இதுவரை 125 கோடி டோஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி ஏற்கனவே பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே நம் நாட்டில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் தடுப்பூசி ஏற்றுமதிக்கு ஏப்ரலில் மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், தொற்று பரவல் குறைந்துள்ளதுடன் உள்நாட்டில் 120 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதனால் தடுப்பூசி ஏற்றுமதிக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி முதற்கட்டமாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உடைய 92 நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்து உள்ளது.


Next Story