மராட்டியத்தில் 4 தொகுதிகளுக்கு மேல்-சபை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு


மராட்டியத்தில் 4 தொகுதிகளுக்கு மேல்-சபை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 27 Nov 2021 1:13 AM GMT (Updated: 27 Nov 2021 1:13 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு மேல்-சபை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் கோலாப்பூர், துலே- நந்துர்பர் மற்றும் மும்பையில் 2 தொகுதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மேல்-சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் 4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கோலாப்பூரில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக பா.ஜனதா வேட்பாளரை திரும்ப பெற்று உள்ளது. இதேபோல துலே-நந்துர்பரில் பா.ஜனதா வெற்றி பெறும் வகையில் காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் வாங்கி உள்ளார். இதன் காரணமாக கோலாப்பூரில் காங்கிரஸ் வேட்பாளரான உள்துறை இணை மந்திரி சாதேஷ் பாட்டீலும், துலே நந்துர்பரில் பா.ஜனதாவின் அம்ரிஷ் பட்டேலும் போட்டியின்றி மேல்-சபை உறுப்பினர் ஆக உள்ளனர். இதேபோல மும்பையில் சிவசேனா, பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் தலா ஒரு தொகுதிகளில் இருந்து போட்டியின்றி தேர்வாக உள்ளனர்” என்றார்.

Next Story