ஜி.எஸ்.டி. தொடர்பான மந்திரிகள் குழு கூட்டம் தள்ளிவைப்பு


ஜி.எஸ்.டி. தொடர்பான மந்திரிகள் குழு கூட்டம் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 27 Nov 2021 2:03 AM GMT (Updated: 2021-11-27T07:33:09+05:30)

ஜி.எஸ்.டி. தொடர்பான மந்திரிகள் குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாநில நிதி மந்திரிகள் அடங்கிய குழு, கர்நாடக மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 தடவை இக்குழு கூடி ஆலோசனை நடத்தி உள்ளது.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் குழு சமர்ப்பித்த சிபாரிசுகளை ஆய்வு செய்வதற்காக இக்குழு இன்று (சனிக்கிழமை) கூடுவதாக இருந்தது. ஆனால், திடீரென இந்த குழுவின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Next Story