தேசிய செய்திகள்

மராட்டியம்: பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி டிரக் மோதல் - 4 பேர் பலி + "||" + Four warkaris killed after being hit by mini-truck near Pune in Maharashtra

மராட்டியம்: பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி டிரக் மோதல் - 4 பேர் பலி

மராட்டியம்: பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி டிரக் மோதல் -  4 பேர் பலி
மராட்டியத்தில் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மினி டிரக் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,

மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் உள்ள இந்து மதக்கடவுள் வித்தல் கோவிலுக்கு ஆண்டுதோறும் பண்டிகை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வருவது வழக்கம்.

இதற்கிடையில், அம்மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தில் இருந்து 27 பக்தர்கள் பாதயாத்திரையாக வித்தல் கோவிலுக்கு புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புனே மாவட்டம் கன்ஹி என்ற கிராமம் அருகே உள்ள சாலையில் இன்று அதிகாலை பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த மினி டிரக் பக்தர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பாதையாத்திரை சென்ற பக்தர்களில் 4 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தை ஏற்படுத்திய மினி டிரக் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. 12 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் ரத்து: மராட்டிய அரசு மீது விழுந்த அடி - பட்னாவிஸ் விமர்சனம்
மராட்டிய பா.ஜ.க.வைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டதை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
2. மராட்டியத்தில் இன்று மேலும் 25,425பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 25,425பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் இன்று மேலும் 35,756 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 35,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் இன்று 33,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று 33,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து - பாஜக எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 மாணவர்கள் பலி
பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பாஜக எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.