தேசிய செய்திகள்

20 வயது இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை - அழுகிய நிலையில் சடலம் மீட்பு + "||" + 20 year old raped and murdered in Mumbai’s Kurla, investigation underway

20 வயது இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை - அழுகிய நிலையில் சடலம் மீட்பு

20 வயது இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை - அழுகிய நிலையில் சடலம் மீட்பு
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட 20 வயது நிரம்பிய இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளப்பட்டுள்ளது.
மும்பை,   

மராட்டிய மாநிலம் மும்பை குர்லா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் அழுகிய நிலையில் இளம் பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் உள்ள ’லிப்ட்’ அறையில் அழுகிய நிலையில் கிடந்த இளம் பெண்ணின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனையில் 20 வயது நிரம்பிய அந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை சில சிறுவர்கள் வீடியோ எடுப்பதற்காக பயன்படுத்தப்படாத அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மொட்டைமாடிக்கு சென்றுள்ளனர். அங்கு உள்ள ’லிப்ட்’ அறையில் உயிரிழந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பெண்ணின் உடல் கிடப்பதை பார்த்த அந்த சிறுவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுவர்களிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இளம் பெண்ணை யார் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 18 நாட்களாக லாரி ஓட்டி உயிரிழந்த டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு!
மாற்று டிரைவர் இல்லாத நிலையில் 18 நாட்களாக லாரியை நிறுத்தாமல் ஓட்டி வந்த லாரி டிரைவர் இதய நோய் ஏற்பட்டு உயிரிழந்தார்.
2. மும்பை;கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இன்று பள்ளிகள் திறப்பு
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மும்பையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
3. மும்பையில் 20 மாடி குடியிருப்பு கட்டிட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
மும்பையில் 20 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலியானார்கள். 23 பேர் காயமடைந்தனர்.
4. மும்பையில் 20 மாடி கட்டடத்தில் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்வு
20 மாடிகள் கொண்ட கமலா கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
5. மும்பையில் மேலும் 6,032 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மும்பையில் மேலும் 6,032 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.