தேசிய செய்திகள்

மிசோரத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு + "||" + Earthquake of magnitude 4.2 hits Mizoram

மிசோரத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

மிசோரத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
மிசோரம் மாநிலத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஐஸ்வால்,

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மர் எல்லையோரம் அமைந்துள்ள அம்மாநிலத்தின் ஷம்ப்ஹை நகரை மையமாக கொண்டு மாலை 3.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவில் அளவில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    

முன்னதாக, இந்தியா - மியான்மர் எல்லையில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. அந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அந்த நிலநடுக்கம் வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்காளத்திலும் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
சீனாவில் கடுமையான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
2. ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
ஜப்பானில் ஏற்பட்டு உள்ள கடுமையான நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
3. லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
லடாக்கில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் தாக்கிய சுனாமி - ஒட்டுமொத்தமாக அழிந்த தீவு - 3 பேர் பலி
கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் ஏற்பட்ட சுனாமி அலை காரணமாக ஒரு தீவே முற்றிலும் அழிந்துள்ளது.
5. அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு
அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.