தேசிய செய்திகள்

மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ், யாருடனும் கூட்டணி இல்லை: சித்தராமையா + "||" + Congress in alliance with Council polls: No alliance with anyone: Siddaramaiah

மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ், யாருடனும் கூட்டணி இல்லை: சித்தராமையா

மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ், யாருடனும் கூட்டணி இல்லை: சித்தராமையா
மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் யாருடனும் கூட்டணி அமைக்காது என்று சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.
மேல்-சபை தேர்தல்

கர்நாடகத்தில் 25 மேல்-சபை உறுப்பினர்கள் பதவிகளுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மைசூருவுக்கு வந்தார். அவர் மைசூரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 10-ந் தேதி மாநிலம் முழுவதும் மேல்-சபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காது. யாருடனும் கூட்டணி அமைக்கும் திட்டமும் இல்லை.

மக்களுக்கு தெரிந்துவிட்டது

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறோம். பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. சமீபத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது தெளிவாக மக்களுக்கு தெரிந்து விட்டது.

பெலகாவியில் லகன் ஜார்கிகோளி சுயேச்சையாக போட்டியிடுகிறார். இது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது. ஆனால் பா.ஜனதாவுக்கு பின்னைடவை ஏற்படுத்தும். குடகு மாவட்டத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பா.ஜனதாவினர் தோல்வி

ஏ.மஞ்சு காங்கிரஸ் கட்சிக்கு வந்தாலும் அவரை சேர்த்துக் கொள்ள மாட்டோம். பா.ஜனதா ஆட்சியின் அராஜகம் குறித்து கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம். மாநிலத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது. ஜனநாயகம் மீது அரசுக்கு அக்கறை இல்லை. ஆட்சி நடத்துவதில் பா.ஜனதாவினர் தோல்வி அடைந்துவிட்டனர்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பஞ்சாப் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
2. கர்நாடகா உள்ளாட்சி அமைப்பு தேர்தல் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி ;பா.ஜ.க பின்னடைவு
கர்நாடகா: நகர்ப்புற உள்ளாட்சித் தொகுதிகளில் காங்கிரஸ் 508, பா.ஜ.க. 437, ஜனதா தளம்(எஸ்) மற்றவை 197 கைப்பற்றி உள்ளன.
3. பா.ஜ.க.வின் பெரும்பான்மை வாதத்தை காங்கிரசால் தோற்கடிக்க முடியுமா? பீட்டர் அல்போன்ஸ் பதில்
ஹலோ எப்.எம்.மில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு பேசுகிறார்.
4. காங்கிரசில் இணைகிறாரா ஹர்பஜன் சிங், சித்துவின் டுவிட்டால் பரபரப்பு
ஹர்பஜன் சிங்கை தி ஷைனிங் ஸ்டார் (மின்னும் நட்சத்திரம்) என்று பாராட்டி சித்து பதிவிட்டுள்ளார்.
5. எளிய மக்களுக்கு என்ன செய்தீர்கள்? மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி
கடந்த 7 ஆண்டு கால ஆட்சியில் மோடி அரசாங்கம் மக்களுக்கு செய்தது என்ன? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.