தேசிய செய்திகள்

உ.பி. சிறுவன் கொலை: சி.பி.ஐ. விசாரணை வேண்டும்; பிரியங்கா காந்தி வலியுறுத்தல் + "||" + UP Boy murder: CBI To be investigated; Priyanka Gandhi insists

உ.பி. சிறுவன் கொலை: சி.பி.ஐ. விசாரணை வேண்டும்; பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

உ.பி. சிறுவன் கொலை:  சி.பி.ஐ. விசாரணை வேண்டும்; பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
உத்தர பிரதேசத்தில் சிறுவன் கொலையில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

பண்டா,

உத்தர பிரதேசத்தின் பண்டா நகரில் 14 வயதுடைய அமன் திரிபாதி என்ற சிறுவன் கொல்லப்பட்டான்.  கடந்த மாதம் நடந்த இந்த சம்பவத்தில் நீதி கேட்டு சிறுவனின் தாயார் போராடி வருகிறார்.

எனினும், குற்றவாளிகள் அரசியல் தஞ்சமடைந்து உள்ளனர் என கூறப்படுகிறது.  இதுபற்றி 
உத்தர பிரதேச காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் கூறும்போது, கொடூர கொலையான 14 வயதுடைய அமன் திரிபாதியின் வழக்கில் நீதி கிடைக்க செய்ய வேண்டும்.  ஒரு மாத காலத்திற்கு சிறுவனின் தாயார் நீதி வேண்டி போராடி வருகிறார்.

அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான உரிமை உள்ளது.  குற்றவாளிகளுக்கு அரசியல் தஞ்சம் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும்.  உடனடி சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.ஏ.எஸ். பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடுங்கள் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஐ.ஏ.எஸ். பணி விதிகளை திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
2. பொங்கல் தொகுப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பொங்கல் தொகுப்பு தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
3. ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்க நிர்ப்பந்திக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
இலங்கைக்கு ரூ.18 ஆயிரம் கோடி கடன் வழங்கும் விவகாரத்தில் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரிகள் வழங்க நிபந்தனை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கொரோனா கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை உடனே மூடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
5. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்
நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.